காராம்பசு வாகனகாட்சி

Event details

  • Monday 2024-04-11
  • 00:00 AM
  • Kannakai Amman Temple
  • 14 Attendees
  • 4 Staff members

Social Share


சிவபூமியம் இலங்கையிலே சைவம் தழைத்து விளங்கும் யாழ் மண்ணின் தென்னகத்தே சிவசீலர்களும், கொடையில் சிறந்த வணிகப் பேராளர்களும், கல்வியும், கலைகளும் கைவரப் பெற்ற பேரறிஞர்களும் நிறைந்த புங்கை நகரினிலே கண்ணகைபுரம் கண்ணகை அம்மன் எனப் போற்றப்படும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ  3ம் திருவிழா,காராம்பசு வாகனகாட்சி நடைபெறவுள்ளது திருவிழா உபாயக்காரர்கள் பெத்தப்பா சிவாலயம்

திருவிழா  காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரையும் மாலை 4.00 மணிமுதல் 8.00 மணிவரையும் நடைபெற்று , அம்பாள் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

திருவிழாக் காலங்களில் தங்களால் இயன்ற பால், தயிர், நெய், தேன், இளநீர் மற்றும் பூ போன்ற அபிஷேகத் திரவியங்களை ஆலயத்தில் வழங்கி அம்பிகை அடியார்கள் யாவரும் ஆசார சீலராய் வருகைதந்து அம்பாளைத் தரிசித்து போருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.

திருவிழாக் காலங்களில் தினமும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) நடைபெறும்

இவ்வண்ணம்:

ஆலய பரிபாலன தர்மகர்த்தா சபையினர்

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்.

கண்ணகைபுரம், புங்குடுதீவு-10

தொ.பே: 021 315 6666, 077 717 4279

web www.kannakaiamman.com | Email : temple@kannakaiamman.com