வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2024

Social Share

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும்
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்
வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2024
அம்பிகை அடியார்களே!ம் வினை தீர்க்க கடல் மீது பேழை தனில் மிதந்து வந்து

கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எம் அன்னையே!

உன் பாதார விந்தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்.

சிவபூமியம் இலங்கையிலே சைவம் தழைத்து விளங்கும் யாழ் மண்ணின் தென்னகத்தே சிவசீலர்களும், கொடையில் சிறந்த வணிகப் பேராளர்களும், கல்வியும், கலைகளும் கைவரப் பெற்ற பேரறிஞர்களும் நிறைந்த புங்கை நகரினிலே கண்ணகைபுரம் கண்ணகை அம்மன் எனப் போற்றப்படும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் அம்பாளின் திருவருளால் நிகழும் மங்களகரமான சோபகிருது வருஷம் பங்குனி மாதம் 27ம் நாள் (09.04.2024)செவ்வாய்க்கிழமையன்று கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 15 தினங்கள் காலை, மாலை உற்சவங்கள் எனச் சிறப்பாக இவ்வருடமும் நடைபெறத் திருவருள் கூடியிருப்பதால் இவ் உற்சவ காலங்களில் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலராய் வருகைதந்து அம்பாளின் திருவருளைப்பெற்றுச் சகல செல்வயோகம்மிக்க பெருவாழ்வு வாழும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.